இந்தியா முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்தாலும், ஒரு சில மாநிலங்கள் மட்டுமே தங்கள் மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுத்து அதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளன.
தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இன்னும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அது மட்டும் இன்றி, தமிழகம், மத்திய அரசு தான் ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று கூறி வந்தது.
இந்த நிலையில், இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார். அரசியல் விவகாரங்களுக்காக மத்திய அமைச்சரவை இந்த ஒப்புதலை அளித்ததாகவும், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதி வாரி கணக்கெடுப்பு சேர்த்து நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், டெல்லியில் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முக்கியமான முடிவுகள் குறித்தும், அவ்வாறு செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
ஜாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசே எடுக்க உள்ளது என்ற தகவலுக்கு, அரசியல் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Edited by Mahendran