நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
Top Tamil News May 01, 2025 12:48 AM

2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.


2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும். இந்நிலையில் மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.