இன்று அட்சய திருதியை...இன்று தங்கம் வாங்க போறீங்களா? இன்றைய நிலவரம் இதோ!
Newstm Tamil April 30, 2025 08:48 PM

தங்கம் விலை கடந்த சில தினங்களாகbஉயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) ஆபரண தங்கம் கிராம், 8,940 ரூபாய்க்கும், சவரன், 71,520 ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்று (ஏப்ரல் 29) தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் உயர்ந்து, 8,980 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 320 ரூபாய் அதிகரித்து, 71,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 30) அட்சய திருதியை என்பதால் எல்லாரும் தங்க ஆபரணங்கள் வாங்குவது வழக்கம்.

இதனால் தங்கம் விலை உயருமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. ஆனால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.8,980க்கும், சவரன் ரூ.71,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அட்சய திருதியை என்பதால், தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் நகை கடைகள் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. தங்க நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.