பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர் அடித்துக் கொலை... கர்நாடகாவில் பரபரப்பு!
Dinamaalai April 30, 2025 06:48 PM

கர்நாடகா மாநிலம், மங்களூருவில் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர் மீது கும்பல் தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 12 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று முன் தினம் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதனை நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த 30 வயதான ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கம் எழுப்பியதாக கூறப்படுகிறது. அவரை சச்சின் (26) என்பவர் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து 20-க்கும் மேற்பட்டோர் கும்பலாக சேர்ந்து அந்த நபரை தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அதிகப்படியான ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வென்லாக் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சி ஆதாரங்களின் அடிப்படையில் 12 பேரை கைது செய்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.