ஹோட்டலில் பயங்கர தீ விபத்து….! 3 தமிழர்கள் பலி…. எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்….!!
SeithiSolai Tamil April 30, 2025 06:48 PM

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஹோட்டல் பால்பட்டி மச்சுவா பகுதியில் அமைந்துள்ளது. நேற்றிரவு 8.15 மணிக்கு ஹோட்டல் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டவுடன் பலர் ஜன்னல் வழியாக தப்பிக்க முயற்சி செய்தனர்.

ஆனாலும் தீ விபத்தில் இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், தியா, ரிதன் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் சிக்கிய பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா தீ விபத்தில் மூன்று தமிழர்கள் உட்பட பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயம் அடைந்தோர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.