மதுபானப் பிரியர்கள் ஷாக் ... பீர் விலை மீண்டும் உயர்வு!
Dinamaalai April 30, 2025 11:48 PM

கர்நாடகா மாநில அரசு புதிய வரி விதிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில்  பியர் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் அனைத்து வகையான பியர்களுக்கும் தயாரிப்பு செலவில் இருந்து 205% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய வரி 195% ஆக இருந்த நிலையில், தற்போது கூடுதல் 10% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, கர்நாடகாவில் இரு வகை வரி முறை நடைமுறையில் இருந்தது. குறைந்த விலை பியர்களுக்கு லிட்டருக்கு ரூ.130 என்ற நிலையான கட்டணமும், உயர்ந்த பிராண்டுகளுக்கு சதவீத அடிப்படையிலான வரியும் இருந்து வந்தது.

இப்போது இந்த இரட்டை முறை முற்றிலும் நீக்கப்பட்டு, எல்லா பியர் வகைகளுக்கும் ஒரே மாதிரியாக 205% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக  பிரீமியம் பிராண்டுகளுக்கு பாட்டிலுக்கு சுமார் ரூ.10 வரை, மற்ற சாதாரண பியர்களுக்கு ரூ.5-க்கு குறைவாக விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, கடந்த 3 ஆண்டுகளில் இது 3 வது முறையாக பியருக்கு வரி உயர்வு எனப்படும். 2023ல் 175% லிருந்து 185% ஆக AED உயர்த்தப்பட்டது. 2025 ஜனவரியில் இது மீண்டும் 195% ஆக உயர்த்தப்பட்டது. தற்போது 205% ஆக மாற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.