பிரபல பாலிவுட் நடிகர் அனில்கபூரின் தாயார் நிர்மல் காலமானார். இவர் கடந்த ஒரு வார காலமாக மும்பையின் கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மோசமடைந்ததால் மே 2 ம் தேதி மாலை 5:45 மணிக்கு காலமானார்.
பிரபல தயாரிப்பாளர் சுரீந்தர் கபூரை மணந்த நிர்மல் கபூருக்கு போனி கபூர், சஞ்சய் கபூர், அனில் கபூர், ரீனா கபூர் என்ற 4 குழந்தைகள் பிறந்தனர்.
மேலும் இவர் அர்ஜுன் கபூர், சோனம் கபூர், ரியா கபூர், ஹர்ஷ் வர்தன் கபூர், ஜான்வி கபூர், அன்ஷுலா கபூர், குஷி கபூர் மற்றும் மோஹித் மர்வா ஆகியோரின் பாட்டியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. நிர்மல் கபூரின் இறுதிச் சடங்குகள் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.