அச்சத்தில் மக்கள்... 2வது நாளாக ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
Dinamaalai May 03, 2025 11:48 PM

 


ஆப்கானிஸ்தான் நாட்டில்  இன்று மே 3 ம் தேதி  நிலப்பரப்பிலிருந்து சுமார் 15 அடி ஆழத்தில் பிற்பகல் 1.20 மணிக்கு   4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக  தேசிய நிலஅதிர்வு கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம்  நிலப்பரப்புக்கு மிக அருகாமையில் ஏற்பட்டது. 

இதனால்  பின் அதிர்வுகள் ஏதேனும் ஏற்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது.  மே 2ம் தேதி  தலைநகர் காபுலுக்கு  மிக அருகாமையில் நிலப்பரப்பிலிருந்து சுமார் 150 அடி ஆழத்தில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக  கூறப்படுகிறது.
தொடர்ந்து, 2வது நாளாக அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது கடுமையானத் தாக்குதல்கள், இடமாற்றம், வறுமை  இவைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கன் மக்களைக் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.