இதுல கூட வில்லங்கம்மா? விஜே பிரியங்கா, கோபிநாத் விஜய் டிவியில் இருந்து விலகல்… வெளியான செம அப்டேட்!
CineReporters Tamil May 03, 2025 09:48 PM

 VJ Priyanka: பிரபல சின்னத்திரை தொகுப்பாளர்களான விஜே பிரியங்கா, கோபிநாத் விஜய் டிவியில் இருந்து விலக இருப்பதாக தொடர்ச்சியாக தகவல்கள் கசிந்த நிலையில் அதற்கான தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் சன் டிவியை விட விஜய் டிவி தொகுப்பாளர்களுக்கு தான் மவுஸு அதிகம். ஒவ்வொரு காலத்திலும் ஒரு தொகுப்பாளர்களுக்கு பிரபலம் அதிகமாக இருக்கும்.

அதில் இந்த முறை டாப் லெவலில் இருப்பது விஜே பிரியங்கா. அதுமட்டுமல்லாமல் பல ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒற்றை நிகழ்ச்சியில் ஹிட் அடித்து வரும் நீயா நானா ரியாலிட்டி நிகழ்ச்சியில் இருந்தும் கோபிநாத் வெளியேற இருப்பதாகவும் டாப் ஐந்து ரியாலிட்டி ஷோக்களை முடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தது.

பல ஆண்டுகளாக விஜய் டிவி அரைத்த மாவையே அரைத்து வருவதால் பெரிய அளவில் லாபம் இல்லாத காரணத்தால் டிவி நிர்வாகம் மாற இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதன்படி விஜய் டிவியை கலர்ஸ் தமிழ் நிர்வாகம் வாங்க இருப்பதாக பேச்சுவர்த்தை நடத்தப்பட்டது.

அதன்படி சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் கலர்ஸ் டீமிடம் விஜய் டிவியை பெரிய தொகைக்கு கைமாற்றி இருக்கின்றனர். மும்பையில் இருந்து ஒரு டீம் இனி விஜய் டிவியை மேற்பார்வை பார்க்கும் எனவும் கூறப்பட்டது. அதன் பேரில் பிரபல நிகழ்ச்சிகளை முடிப்பதாகவும் அதன் தொகுப்பாளர்களான பிரியங்கா, கோபிநாத் வெளியேற இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி விஜே பிரியங்கா தற்போது கல்யாணம் முடிந்த கையோடு ஹனிமூனிற்கு கணவருடன் சென்று இருக்கிறார். அதற்காக தான் சில வாரங்கள் லட்சுமிபிரியா சூப்பர்சிங்கரை தொகுத்து வழங்கி வருகிறார். 

ஹனிமூன் முடிந்து திரும்பிய கையோடு மீண்டும் விஜய் டிவி பக்கம் விஜே பிரியங்கா வந்துவிடுவார். அதுபோல் தற்போது பல விவாத நிகழ்ச்சி இருந்தாலும் ஒவ்வொரு வாரத்திற்கும் பரபரப்பை கூட்டி நீயா நானா சீரியல் இன்னமும் ஹிட்டடித்து வருகிறது.

அதனால் அந்த நிகழ்ச்சியை முடிக்க எந்த காலத்திலும் தற்போதும் விஜய் டிவிக்கு ஐடியா இல்லையாம். இதனால் கோபிநாத் தற்போது விஜய் டிவியை விட்டு வெளியேற மாட்டார் என்றும் குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.