உத்திரபிரதேச மாநிலத்தில் ரோகித் என்ற 21 வயது வாலிபரும் சௌமியா (19) என்ற கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று கான்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரோஹித்தின் பெற்றோர் அவர்களை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுடைய காதல் விவகாரம் தெரிய வரவே பின்னர் தங்கள் மகனுடன் அவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு நடுரோட்டில் காதல் ஜோடியை அடிக்கவும் செய்தனர்.
View this post on Instagram
ரோகித் தாய் சுசிலா இளம்பெண்ணின் முடியை பிடித்து இழுத்து நடு ரோட்டில் அடித்த தாக்குகிறார். அதோட ரோஹித்தின் தந்தை ஷிவ்கரன் தன்னுடைய மகனை செருப்பால் அடிக்கிறார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் தடுக்க முயன்ற நிலையில் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.