பீகார் மாநிலம் ரக்சௌல் நகரில் மார்வாரி பஞ்சாயத்து கோவில் அமைந்துள்ளது. இங்கு 80 வயதான கீதா தேவி என்பவர் தரிசனத்திற்காக வந்திருந்தார். அப்போது அவர் இறைவனின் முன் நின்று வழிபாடு செய்து கொண்டிருந்தபோது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் அவரின் பின்னால் நின்று கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அவர் திடீரென கீதா தேவியின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார். அந்தத் திருடன் அங்கிருந்து சென்ற பிறகு மூதாட்டி கீழே விழுந்து விட்டார். சிறிது நேரம் கழித்து மூதாட்டி அங்கிருந்து எழுந்து அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
பின்னர் கீதா தேவியின் மகனும் அப்பகுதியை சேர்ந்த துணி கடை நடத்திவரும் ஜெகதீஷ் பிரசாத் காவல் நிலையத்தில் இது பற்றி புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் குற்றவாளியை வலை வீசி தேடிவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .