பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை..!
Newstm Tamil May 03, 2025 10:48 PM

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தி வருகிறது. இரு நாடுகள் இடையே எல்லையில் பதற்றமும் அதிகரித்து வருகிறது. எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் 9வது நாளாக தொடர்ந்து சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;

பாகிஸ்தானில் இருந்து உற்பத்தியாகும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களையும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது, மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு விதிவிலக்கு தேவை என்றால் மத்திய அரசின் முன் ஒப்புதல் அவசியம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.