“நான் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை”… CSK-வின் தோல்விக்கான பழியை நானே ஏற்றுக்கொள்கிறேன்… கேப்டன் தோனி வருத்தம்..!!!
SeithiSolai Tamil May 04, 2025 03:48 PM

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூர் ஸ்டேடியத்தில் ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் ஆர்சிபி பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 62 ரன்கள் வரை எடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில் ஆயுஷ் மாத்ரே மற்றும் ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ஆயுஷ் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 94 ரன்கள் எடுத்த நிலையில் டிவேன் பிரேவிஸ் வீசிய முதல் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். ஜடேஜா 77 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த நிலையில் கடைசியில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சென்னை 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் சென்னை அணியின் தோல்விக்கு முழு பொறுப்பு நான்தான் என்று எம்.எஸ் தோனி கூறியுள்ளார். அதாவது தோல்வி குறித்து பேசிய தோனி, நேற்று பேட்டிங்கில் எங்கள் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் பந்துவீச்சில் சொதப்பிவிட்டோம். நான் பேட்டிங்கில் ஒரு சில ஷாட்களை ஆடியிருந்தால் எங்கள் வீரர்கள் மீதான அழுத்தம் குறைந்து இருக்கும். நான் இறுதி கட்டத்தில் இரண்டு பெரிய ஷாட்களை ஆடி எங்கள் வீரர்கள் மீதான அழுத்தத்தை குறைத்து இருக்க வேண்டும். நான் செய்தது தவறு.

எனவே அதற்கான பழியை நானே ஏற்றுக்கொள்கிறேன். பெங்களூர் அணியில் ஷெப்பர்ட் அதிரடியாக விளையாடினார். எங்கள் அணியில் பெரும்பாலான வீரர்கள் ஆடும் விதத்தில் அதாவது பேட்டிங் செய்யும் விதத்தில் தயக்கம் காட்டுகிறார்கள் என்றார். மேலும் சென்னை அணியின் தோல்விக்கு ஏற்கனவே தோனி மீது தான் விமர்சனங்களுக்கு குவியும் நிலையில் தற்போது அவரே தோல்விக்கு நான்தான் முழு பொறுப்பு என்று கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.