பெரம்பலூர் மாவட்டத்தில் தொண்டமாந்துறை கிராமத்தில், சட்ட விரோதமாக ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்க முயற்சித்த இருவர் மின்சாரம் தாக்கி பலியாகினர்.
காட்டாற்றின் அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து ஒயரை இணைத்து, தண்ணீரில் போட்டு மீன் பிடிக்கும் போது இந்த கோர விபத்து நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப்பகுதியில் இதுபோல சட்ட விரோதமாக சிலர் மீன் பிடிப்பதாக ஊர் மக்கள் ஏற்கனவே குற்றச்சாட்டு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.