தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 5வது தெருவைச் சேர்ந்தவர் சூசைகனி மகன் ஹென்றி (48) இவர் இன்று காலை தூத்துக்குடி நான்காவது ரயில்வே கேட்டுக்கும் மீள விட்டானுக்கும் இடையே உள்ள மகிழ்ச்சி புரம் அருகே உள்ள தண்டவாளத்தில், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த முத்துநகர் விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே பைலட் தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் ரயில் புறப்பட்டு சென்று விட்டது. தகவல் அறிந்த தூத்துக்குடி இருப்புப் பாதை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர் முன்னதாக பாலக்காட்டில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த ரயில், தண்டவாளத்தில் சடலம் கிடந்ததால் மகிழ்ச்சி புரம் அருகே நிறுத்தப்பட்டது.
இதனால் 4ம் ரயில்வே கேட், 2ம் கேட், 1ம் ஆகிய மூன்று ரயில்வே கேட்களும் திறக்கப்படவில்லை. ஒரே நேரத்தில் 3 ரயில்வே கேட்களும் மூடப்பட்டதால் வாகனங்கள் அணிவித்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த, ஹென்றி சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்ததாகவும் தூத்துக்குடிக்கு வந்தபோது குடும்பத்துடன் ஏற்பட்ட தகராறில் மன வேதனையடைந்து இன்று காலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.