ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்கைச் சேர்ந்த 28 வயது பாடகர் ஹ்யூகோ ஒன், சமீபத்தில் தனது இசை திறமையால் இல்லாமல், தொழில்முனைவோர் எலோன் மஸ்க்கை போல தோற்றம் அளித்ததால் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளார்.
ஆனால், இதனால் பெருமை அடைவதற்குப் பதிலாக, ஹ்யூகோ எரிச்சலடைந்துள்ளார். “எலோன் ஒரு நல்ல மனிதர் அல்ல என்பதால், அவருடன் ஒப்பிடப்படுவதை நான் ஒரு பாராட்டாகக் கூடக் கருதவில்லை” என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஜெர்மனியில் ஆசிரியராக பணியாற்றும் ஹ்யூகோ, 2018ஆம் ஆண்டு முதல் இந்த ஒப்பீடு தொடர்ந்து அவரை தொற்றிக் கொண்டிருப்பதாக கூறினார். பப்புகள், கடைகள் என பொதுமிடங்களில் மக்கள் தன்னை மஸ்க்குடன் குழப்புவதால், தனியுரிமை குறையவில்லை என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
“நான் தோற்றமளிக்கும் விதம் எனக்குப் பிடிக்கும். ஆனால் மஸ்க்குடன் ஒப்பிடப்பட வேண்டிய அவசியமில்லை” என அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த வைரலான தோற்ற ஒற்றுமை அவருடைய இசை பயணத்துக்கு ஒரு புத்துயிராக அமைந்திருக்கிறது. “இந்த ஒப்பீட்டால் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு பார்வையாளர்கள் அதிகரித்து, பாடல்களும் பதிவிறக்கம் செய்யப்படத் தொடங்கியது” என ஹ்யூகோ கூறியுள்ளார்.
அதே நேரத்தில், “நான் எலான் மஸ்க்கை போல, அவருடைய எண்ணங்களை போல ஒத்துப்போக விரும்பவில்லை. மக்கள் அதனை புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.