Pandian Stores2: நேக்காக ஸ்கெட்ச் போட்டு ஆசைப்பட்ட பைக்கை தட்டிய ராஜி… காதல் வலையில் கதிர்!
CineReporters Tamil May 04, 2025 08:48 PM

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

ராஜி கடைசி சுற்றுக்கு தேர்வாகி விடுகிறார். மாரியம்மா பாடலுக்கு சாமி நடனம் ஆட குடும்பத்தினரிடம் சொல்லாமல் தீச்சட்டி வேறு எடுக்க எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் ராஜி தரமாக ஆடி முடித்து விடுகிறார்.

பாண்டியன் வீட்டில் மகன்கள் ஊருக்கு போவதை சரவணனிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். என்னை கூப்பிட்டு போயிருக்கலாம் என பழனி கூற அப்போ ஊர் சுத்த தான் செந்திலும் போய் இருக்கானா என்கிறார் பாண்டியன்.

இன்னைக்கு கடையில் ஆள் இல்லாமல் என்ன செய்வது என யோசிக்க சரவணனை லீவ் போட சொல்கிறார். உடனே மயில் நான் கடைக்கு வந்து வியாபாரம் பார்க்கிறேன் என்கிறார். ஆனால் பாண்டியன் அதெல்லாம் வேண்டாமா. நீ வீட்டிலே இரு எனக் கூறி விடுகிறார்.

டீச்சர் வேலைக்கே மறுபடி பேசவா எனக் கேட்க சரவணன் அரசி திருமணம் வருவதால் அவ வேலைக்கு இப்போ போக வேண்டாம் என்கிறார். இதை கேட்கும் பழனி ஆச்சரியப்படுகிறார். சரவணன் மயிலிடம் சர்டிபிகேட் வாங்க விபரங்களை கேட்டு எடுத்து வைக்க சொல்லிவிட்டு செல்கிறார்.

தீச்சட்டி எடுத்து ஆடியதுக்கு கோமதி ராஜியை திட்டி கொண்டு இருக்கிறார். ராஜியும் இன்னொருவரும் கடைசி சுற்றுக்கு தேர்வாகி இருக்கின்றனர். அதில் ஒரு பாடலுக்கு ஆன் டி ஸ்பாட்டில் ஆட வேண்டும் எனக் கூற எல்லாரும் தயாரா இருக்கின்றனர். 

இருவரும் ஆட தொடங்க ராஜி இரண்டாம் பரிசுக்கு ஆசைப்பட்டு பாதியிலேயே நின்று விடுகிறார். எல்லாரும் அவரை ஆட சொல்ல ஆனால் அவர் ஆடாமல் சமாளித்து விடுகிறார். கீழே வர கோமதி எதுக்கு நின்ன என திட்டிக்கொண்டு இருக்கிறார்.

மீனா அவர் இரண்டாம் பரிசுக்காக நின்றது தெரிந்ததால் சிரித்து கொண்டு இருக்கிறார். முதலில் கதிருக்கு புரியாமல் நிற்கிறார். ஆனால் ராஜி பாவமாக முகத்தை வைத்து கொண்டு இருக்கிறார். மீனா உனக்கு கார் இல்லை பைக் தான் என்கிறார். 

போட்டி முடிந்து பரிசு கொடுக்கத் தொடங்குகின்றனர். மூன்றாம் பரிசாக தங்க மோதிரம் கொடுக்க கோமதி இதையாவது இவ வாங்கி இருக்கா என்கிறார்.  பைக் ராஜிக்கு பரிசாக கொடுக்க அவர் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போய் நின்று கொண்டிருக்கிறார்.

இதை பார்க்கும் கோமதி பைக் வாங்கியதற்கு முதல் பரிசு வாங்கியது மாதிரி நிக்கிறா பாரு என்கிறார். அதை பார்க்கும் கதிர் ஆச்சரியமடைய அந்த பைக்கை இவ கூட ஓட்ட முடியாது கதிர் தான் ஓட்டலாம் என அதன் புகைப்படத்தை கை காட்ட சிரிக்கிறார்.

ஒருநாள் ராஜியிடம் இதுதான் என்னுடைய கனவு பைக் எனக் கூற நான் வாங்கி தரவா எனக் கேட்கிறார் ராஜி.. உன்னால் எப்படி வாங்கி தர முடியும் என கதிர் கேட்க பெண்கள் நினைத்தால் செய்ய முடியாது என ஒண்ணும் இல்லை என சிரித்துக் கொண்டே சொல்லிக் கொண்டிருக்கிறார் ராஜி.. இதை நினைக்கும் கதிர் தற்போது சிரித்துக் கொண்டிருக்கிறார்.

The post first appeared on .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.