சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நடிகர் விஜய் பாஜகவின் டீம் என்று கூறப்படுவதை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, தம்பி விஜய் அவர்கள் திமுகவை கடுமையாக எதிர்க்கிறார்.
பாஜகவும் கடுமையாக எதிர்க்கிறது. இன்று திமுக மிகவும் பதற்றத்தில் உள்ளது. எப்போது அதிமுக, பாஜக கூட்டணி அமைந்ததோ அப்போதிலிருந்து திமுக பதற்றத்தில் உள்ளது. விஜய் கடுமையாக எதிர்க்கிறார். அதை மேலும் தீவிர படுத்த வேண்டும் என்று நான் கூறுகிறேன்.
அதற்காக B டீம் என்றெல்லாம் கூற முடியாது. அவர்கள் எத்தனை டீம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும். விஜய் திமுகவின் எதிர்ப்பு டீம். பாஜகவும் திமுகவின் எதிர்ப்பு டீம் என்று தெரிவித்தார்
மேலும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தினம் ஒரு பாராட்டு விழா நடத்தும் விளம்பர மாடல் திமுக அரசியல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதிமுக, பாஜக கூட்டணிக்கு தவெக- வை இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், அண்மைக் காலமாக பாஜகவினர் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.