குஜராத் மாநிலத்தில் சபர்கந்த் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹின்கதியா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த ஜீப் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. அதே நேரத்தில் இரு சக்கர வாகனம் ஒன்றும் மோதியது. அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிய நிலையில் பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 8 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.