உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி… 9 அணிகளுக்கும் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி…. 3- வது இடம் பிடித்த இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா?…!!!
SeithiSolai Tamil May 16, 2025 07:48 PM

கடந்த 2019 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இந்த தொடரின் முதல் சீசனில் நியூசிலாந்தும், 2-வது சீசனில் ஆஸ்திரேலியாவும் கோப்பையை வென்றது. இந்த 2 சீசன்களிலும் இந்தியா 2-வது இடத்தை பிடித்தது. தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

இந்த போட்டி அடுத்த மாதம் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத்தொகையை பிசிசியை அறிவித்துள்ளது. அதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.30.78 கோடியும், இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த அணிக்கு ரூ. 18.46 கோடியும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

மேலும் இந்த தொடரில் கலந்து கொண்ட அணிகளுக்கு புள்ளி பட்டியலில் பிடித்த இடங்களை வைத்து பரிசுத்தொகை அறிவிக்கப்படும். அதன்படி 3-வது இடத்தை பிடித்த இந்திய அணிக்கு ரூ.12.33 கோடி வழங்கப்பட உள்ளது.

4-வது இடத்தை பிடித்த நியூஸிலாந்து அணிக்கு ரூ. 10.28 கோடியும், 5-வது இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு ரூ.8.22 கோடியும், 6-வது இடம் பிடித்த இலங்கை அணிக்கு ரூ.7.19 கோடியும், 7-வது இடம் பெற்ற வங்காளதேச அணிக்கு ரூ. 6.17 கோடியும், 8-வது இடம் பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரூ.5.14 கோடியும் கடைசி இடம் பிடித்த பாகிஸ்தானுக்கு ரூ.4.11 கோடியும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.