காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இருப்பினும் இந்தியா வலுவான S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் முயற்சிகளை தகர்த்து எறிந்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து நேற்று இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதை இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தகர்த்தெறிந்தது.
பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது. மேலும் பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்களும் நடுவானிலேயே வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், ராவல்பிந்தி, சியோல் கோட் நகரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வர்த்தக தலைநகர் காராச்சி துறைமுகத்தின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும், காஷ்மீரிலும் 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளன.
The post appeared first on .