பாகிஸ்தானிற்கு நிதி வழங்குவதில் ஆழமான யோசனை தேவை... ஐஎம்எஃப்-க்கு இந்தியா வலியுறுத்தல்!
Dinamaalai May 10, 2025 02:48 AM

தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதற்கு முன் ஆழமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். 

பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலர் கடனை வழங்குவது குறித்து ஐஎம்எஃப் அமைப்பு இன்று மதிப்பாய்வு செய்ய உள்ள நிலையில், இதனை இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்காக வழங்கப்பட்ட நிதி எதற்காக பெறப்பட்டதோ அதற்காக பயன்படுத்தப்பட்டதா,அல்லது வேறு எதற்காகவும் பயன்படுத்தப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் ஐஎம்எஃப் அமைப்புக்கான இந்தியாவின் நிர்வாக இயக்குனர், இந்தியாவின் நிலைப்பாட்டை முன்வைப்பார் என்றும் தெரிவித்தார். இதனிடையே இந்தியாவின் தாக்குதலால் கடும் சேதத்தை சந்தித்துள்ளதாகவும் எனவே நிதி நெருக்கடியை சமாளிக்க கடன் வழங்க வேண்டும் எனவும் உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது. 

ஆனால், உலக வங்கி, ஆசிய வங்கி, சர்வதேச நிதியம் மூலம் தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானிற்கு கிடைக்கும் கடனை தடுத்து நிறுத்தவும் முயற்சிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்நாடு, கடனுதவி கிடைக்காவிடில் கடுமையான சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.