நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்தனர்.இதனால் ஐபிஎல் கிரிக்கெட் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலில் உள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் மே16 மீண்டும் தொடங்கலாம் எனவும் , ஒரு நாளில் இரண்டு போட்டிகள் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. மே30 இறுதி போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டிகள் சென்னை,ஹைதராபாத், பெங்களூரு மைதானங்களில் நடத்தப்பட வாய்ப்புள்ளது. அனைத்து வீரர்களையும் மே 13ஆம் தேதிக்குள் அணியில் இணைய உத்தரவிடப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிக்கான புதிய அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகிறது.