போர் நிறுத்தம்- அடுத்து என்ன?... பிரதமர் மோடி அவசர ஆலோசனை
Top Tamil News May 11, 2025 03:48 AM

டெல்லியில் முப்படை தளபதிகள் மற்றும் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் ஆகியோருடன் பிரதமர் மோடி தனது இல்லத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் பயங்கரவாதிகள்  தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்திய இராணுவம்  ஆப்பரேஷன் சிந்தூர் தொடங்கி பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாமை தாக்கியது. இதனால் பாகிஸ்தான் பதில் தாக்குதலில் ஈடுப்பட்டதால் இரு நாடுகள் இடையே தொடர் சண்டை ஏற்பட்டது. இந்திய முப்படைகளின் திறமையான இராணுவ நடவடிக்கைகள் காரணமாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான மத்திய அரசின் உறுதித் தன்மை காரணமாகவும் இந்திய பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தியதையடுத்து அமைச்சர்கள், முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தலைமை தளபதி, முப்படைத் தளபதிகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.