சிந்து நதி நீர் நிறுத்தம்…! தற்போதைய நிலையே தொடரும்….? வெளியுறவு துறை அமைச்சகம் அறிவிப்பு….!!
SeithiSolai Tamil May 11, 2025 04:48 AM

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில் பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இருப்பினும் அனைத்து தாக்குதலையும் இந்தியா தகர்த்தெறிந்தது. இரு நாடுகளும் போரை கைவிட வேண்டும் என அமெரிக்கா சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தற்போது இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரியும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முதலில் கேட்டதன் பெயரில் தான் தாக்குதலை கைவிட்டு விட முடிவு செய்யப்பட்டது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தாக்குதல் நிறுத்தியதற்கு முன்பும் பின்பும் எந்தவித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை. போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் சிந்து நதி நீர் உடன்பாடு விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது..

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.