இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணே... இபிஎஸ்க்கு அண்ணாமலை வாழ்த்து !
Dinamaalai May 12, 2025 06:48 PM


 
முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக எதிர்க்கட்சி தலைவர் இன்று பிறந்தநாள் காணும்  எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  எடப்பாடி பழனிசாமிக்கு தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முன்னாள் முதலமைச்சரும் அஇஅதிமுக பொதுச்செயலாளாருமான, அண்ணன் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் திரு எடப்பாடி பழனிசாமி , நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.