இன்று பிற்கலில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், முப்படை தளபதிகள் உடன் டெல்லியில் பிரதமர் மோடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் போராக மாற இருந்த நிலையில், இருநாடுகளும் சண்டையை நிறுத்தவதாக அறிவித்தன. இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பு பிறகும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் அத்துமீறல்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், முப்படை தளபதிகள் உடன் டெல்லியில் பிரதமர் மோடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். எல்லையோர மாநிலங்களின் தற்போதைய நிலவரம், மற்றும் இன்று மதியம் பாகிஸ்தானுடன் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் பேசப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகள் உடன் உரையாடி வருகிறார்.