அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போர் பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கையாக, இரு நாடுகளும் பரஸ்பர வரி விதிப்புகளை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன.
தற்போதைக்கு 90 நாட்களுக்கு இந்த வரி குறைப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படும் என இருநாடுகளுக்கு வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு விதித்த 145 % வரியை 30%-ஆக அமெரிக்கா குறைத்துள்ளது.
அதே போல சீனா, அமெரிக்க பொருட்களுக்கு விதித்த 125% வரியை இருந்து 10 % ஆக குறைக்கும்.
சுவிட்சர்லாந்தில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இரு நாடுகள் பரஸ்பரம் விதித்த வரிகளில் 115% வரியை புதன்கிழமை முதல் குறைக்கும் என அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளார்.