தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆப்கானிஸ்தானில் பெண்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. மேலும், பெண்கள் 6ம் வகுப்புக்கு மேல் படிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது, செஸ் விளையாட்டுக்கு தடை விதித்து புது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
செஸ் விளையாட்டு சூதாட்டத்தின் ஒரு வழிமுறையாக இருப்பதால், நாட்டின் நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையை தடுக்கும் சட்டத்தின்படி, தடை விதிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத ரீதியான ஆட்சேபனைகள் செஸ் விளையாட்டின் மீது இருப்பதால், இந்த பிரச்னை தீர்க்கப்படும் வரையில் செஸ் விளையாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது செஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.