மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டம் ஹார்டி கிராமத்தில், காதல் விவகாரம் காரணமாக ஒரு மனைவி தனது கணவரை கழுத்தை நெரித்துக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான மோகன் சாகேத் என அடையாளம் காணப்பட்டவர், தன்னுடைய மனைவியுடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறின் பின்னணியில், உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மனைவிக்கு வேறொரு இளைஞருடன் தொடர்பு இருந்ததைக் கணவர் அறிந்ததால், இருவருக்கிடையே நாள்தோறும் வாக்குவாதம் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குத் காவல் நிலைய எல்லைக்குள் நடந்ததாகவும், சம்பவம் நடந்ததும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மோகன் சாகேத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனைவியும், அவருடைய காதலனும் தற்போது போலீசார் காவலில் உள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது போன்ற காதல் பின்னணியில் கணவரை கொலை செய்யும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.