நாளை சென்னையில் மூவர்ண கொடி யாத்திரை... நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!
Dinamaalai May 13, 2025 12:48 PM


ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் நாளை பா.ஜ.க சார்பில் மூவர்ண கொடி யாத்திரை நடத்தப்படும் என  தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். இது குறித்து  வெளியிட்ட அறிக்கையில்  உலக அமைதிக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகள் பயிற்சி கூடாரமாகவும், அடைக்கல பூமியாகவும் இருக்கும் பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு, இந்தியா தீவிர தாக்குதல் நடத்தி உள்ளது. பஹல்காம் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தானின் தீவிரவாத பயிற்சி கூடங்கள், நம் ஆயுதப்படைகளால் ஆபரேஷன் சிந்தூர் மூலம் சேதமாக்கப்பட்டுள்ளது.  

நம் ஆயுதப்படை வெற்றிக்கும், பிரதமர் மோடியின் உறுதியான தலைமையையும் சிறப்பிக்கும் வகையில், அடுத்த சில நாட்களுக்கு மிகப்பெரிய அளவில் மூவர்ண கொடி ஏந்திய யாத்திரைகள் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (புதன்கிழமை) யாத்திரை நடைபெறும். 

தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் மே 15ம் தேதியும், மற்ற மாவட்ட பேரூர்களில் 16, 17ம் தேதிகளிலும், சட்டசபை தொகுதிகள், தாலுகாவின் ஊர்கள், பெரிய கிராமங்கள் ஆகிய இடங்களில் மே 18 முதல் 23ம் தேதி வரையிலும் மூவர்ண கொடி ஏந்திய யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக  கூறப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.