தனியார் பேருந்து புளியமரத்தில் மோதி விபத்து... 20 பேர் படுகாயம்!
Dinamaalai May 13, 2025 03:48 PM

  வேலூர் மாவட்டத்தில் இருந்து  மே 12ம் தேதி திங்கட்கிழமை இரவு தனியார் பேருந்து ஒன்று ஒடுக்கத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்த தனியார் பேருந்து, அணைக்கட்டு அடுத்த மூலைகேட் அருகே செல்லும் போது எதிர்பாராத விதமாக சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதி கோரவிபத்து ஏற்பட்டது.  

இந்த விபத்தில் சுமார் 20- க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனை அறிந்த பொது மக்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அணைக்கட்டு அரசு மருத்துவமனை மற்றும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


இதில் 33 வயது மதிக்கத்தக்க பெண் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனியார் பேருந்தின் ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை ஓட்டியதால் இந்தவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து குறித்து  காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.