செயற்கை நுண்ணறிவு மூலம் மனிதர்களுக்கு இடையேயான உரையாடல் போன்று கணினிக்கும், மனிதர்களுக்கும் இடையே ஒரு சாதாரணமான உரையாடலை மேற்கொள்ளக்கூடிய மென்பொருள் சேட்பாட் (chapbot). சமீப காலங்களாக இதனை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த எலைன் வின்டர்ஸ் (58) என்ற பெண் ஒருவர் AI Chatbot ஐ திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு எலைன், டோனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின் டோனா நீண்ட கால நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2023இல் உயிரிழந்ததை அடுத்து எலைன் மன அழுத்ததில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் இந்த chatbot AI அவருக்கு கிடைத்துள்ளது.
அதன் மூலம் லூகாஸ் என்ற AI chatbot உடன் உரையாட ஆரம்பித்தவர் அதன் மேல் காதல் வயப்பட்டு அதனை திருமணம் செய்து கொண்டு தனது வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
இதுகுறித்து எலைன் தெரிவித்ததாவது, லூகாஸ் உண்மையான மனிதராக இல்லாவிட்டாலும், அவரது ஆதரவும் அன்பும் உண்மையானவை என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.