“பல வருஷங்களாக புதையலை பாதுகாத்த நாகப்பாம்பு”… பெட்டியை திறந்ததும் புஷ் புஷ் என சீறல்… மின்னும் தங்க நாணயங்கள்… வைரலாகும் வீடியோ…!!!!
SeithiSolai Tamil May 13, 2025 07:48 PM

சமூக வலைதளங்களில், தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது பரவலாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், மலை அடிவாரப் பகுதியில் ஒருவர் மெட்டல் டிடெக்டர் கொண்டு ஒரு புதையலைத் தேடுகிறார். குறுகிய நேரத்தில் கண்டுபிடிப்பான் ஒலிக்கத் தொடங்க, அந்த நபர் சற்று ஆழமாக தோண்டுகிறார். பின்னர் தரையில் புதைந்திருந்த ஒரு பழைய பெட்டியை கண்டுபிடிக்கிறார். ஆனால், அதனைத் திறந்தவுடன், உள்ளே ஒரு விஷப் பாம்பு நாணயங்களை பாதுகாத்து அமர்ந்திருப்பது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

இந்த வீடியோ கடந்த ஆண்டு பிப்ரவரியில் @_.archaeologist என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டதாகத் தெரிகிறது. தற்போது மீண்டும் வைரலாகி பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். சிலர் இது நிச்சயமாக ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நாடகம் என்று கூறுகிறார்கள். “பல ஆண்டுகள் மூடிய பெட்டியில் பாம்பு உயிருடன் இருக்க முடியாது” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

மற்றொருவர், “நாணயங்களும் பெட்டியும் மிகவும் புதியதாக உள்ளது, இவை சமீபத்தில் வைத்தது போலவே தெரிகிறது” என விமர்சித்தார். அதேசமயம், சிலர் இதை “அற்புதமான கண்டுபிடிப்பு” எனகூறியுள்ளனர். பொது மக்களை வியக்க வைக்கும் இந்த வீடியோ உண்மைதானா அல்லது பார்வையாளர்களை கவர்வதற்கான ஒரு நாடகமா என்பது தெளிவாகவில்லை. ஆனால், இது இணையத்தில் மிகவும் வைரலாகியுள்ளது என்பதில் ஐயமில்லை.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.