Siragadikka aasai: முத்துவின் லைசன்ஸ் கேன்சல் செய்த அருண்… இனிமே உங்க காதலுக்கும் ஊஊ தான்!
CineReporters Tamil May 13, 2025 05:48 PM

Siragadikka aasai: சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.

ரோகிணி மற்றும் மனோஜ் இருவரும் ஷோரூமில் பேசிக் கொண்டிருக்கின்றனர். எனக்கு உங்க வீட்டில மரியாதையே இல்ல. சாப்பிட விடுவதில்லை. உன் கிட்ட பேச விடுவதில்லை. இதை பத்தி உனக்கு என்ன கவலையும் இல்லை என ரோகிணி சொல்ல நீ எதுக்கு பொய் சொன்ன என்கிறார் மனோஜ்.

உங்க அம்மா கிட்ட பேராசை இருக்கு அதுக்கு தான் பொய் சொன்னேன் என்கிறார். சரி என்கிட்ட எதுக்கு பொய் சொன்ன என மனோஜ் கேட்க ரோகிணி அமைதியாகிறார். முதலில் எங்க அம்மாவ சமாதானப்படுத்து என மனோஜ் கூற ஏன் நீ பண்ண மாட்டியா என்கிறார் ரோகிணி. நான் பொய் சொல்லலையே என்கிறார் மனோஜ்.

அந்த நேரத்தில் ரோகிணிக்கு ஒரு மெசேஜ் வர அது முத்துவை கைது செய்த வீடியோ. நான் மட்டும் தான் தப்பு செய்றேனா என மனோஜுக்கு அதை காட்டுகிறார். ஸ்ருதிக்கும் அவர் அம்மா அந்த கைது வீடியோவை அனுப்பி வைக்க ரவி மற்றும் ஸ்ருதி பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

போலீஸ் ஸ்டேஷனில் முத்துவை வைத்திருக்கும் அருண் அவருடைய லைசென்சை கேன்சல் செய்கிறார். நிஜமாவே பிரேக் பிடிக்கலை எனக் கூற அதை நம்பாமல் தன்னை இடிக்க வந்ததாக பிரேம் செய்ய மேலதிகாரிகளும் அவருக்கு சப்போர்ட் செய்கின்றனர்.

முத்து உடைய காரையும் கொடுக்காமல் எதா இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக்கொள் என சொல்லி அனுப்பி விடுகிறார். அவர் சென்றுவிட அந்த நேரத்தில் முத்துவின் காரை எடுத்துச் சென்ற கான்ஸ்டபிள் கையில் கட்டுடன் வருகிறார்.

என்ன ஆச்சு என கேட்க அந்த டிரைவர் சொன்ன மாதிரியே காரில் பிரேக் பிடிக்கவில்லை. நான் எடுத்துக் கொண்டு ஒரு இடத்தில் மோதி விட்டதால் அங்கிருந்த மெக்கானிக் தான் வண்டியை சரி செய்து என்னையும் ஆஸ்பத்திரி அழைத்து செய்து கூட்டி வந்ததாக கூறுகிறார்.

அருண் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம். இப்போ சொன்னா அவன் ரொம்ப ஆடுவான். அவனும் நிறைய தப்பு செஞ்சிருக்கான். ஒரு ஆறு மாதம் லைசன்ஸ் இல்லாம இருக்கட்டும் எனக் கூறி அனுப்புகிறார். வீட்டில் ஸ்ருதி அம்மா வந்து இப்படி ஒரு வீட்டில் என் பெண் இருப்பது பயமா இருக்கு என்கிறார்.

அவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது முத்து, மீனா வர விஜயா திட்டுகிறார். இதில் கடுப்பாகும் மீனா நாங்களே பல பிரச்னைகளில் இருக்கோம். தேவையில்லாம பேசாதீங்க என கண்டிக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.