அதன் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு , 2021ல் மேலும் ஹெரோன் பால், பைக் பாபு எனப்படும் பாபு, அருளானந்தம், மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று நீதிபதி ஆர். நந்தினிதேவி இந்த வழக்குக்கான தீர்ப்பையும் அறிவித்துள்ளார். அதன்படி கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் மொத்தமாக சேர்த்து ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு. ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ. 10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும் வகையில் கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது குறித்து பேசிய அவர் ” பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ முன்வைத்த 76 குற்றச்சாட்டுகளில் கூட்டுச்சதி, பெண்ணை கடத்தி செல்வது, கூட்டு பாலியல் வன்கொடுமை உட்பட 66 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளது. இந்த வழக்கில் 376 (D) கூட்டுப் பாலியல் வன்கொடுமை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
376 (2N) மீண்டும் மீண்டும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது. உச்சபட்ச தண்டனையாக சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. எனவே, எதிரிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா ரூ.10 லட்சம் – 15 லட்சம் வழை இழப்பீட்டு வழங்கபடும். வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி தான்” எனவும் கூறியுள்ளார்.