தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதேபோன்று வேறு சில மாநிலங்களுக்கும் தேர்தல் வர இருக்கிறது. இந்த தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் பலரும் தயாராகி வரும் நிலையில் புதிதாக பலர் அரசியல் கட்சிகளை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் நவம்பர் மாதம் 11ஆம் தேதி முதல் பொதுச் சின்னத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தற்போது இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் முன்கூட்டியே தேர்தல் சின்னத்திற்கு விண்ணப்பிப்பது அவசியமாகும்.