#featured_image %name%
பலூச்சிஸ்தான் தேசிய இயக்கத்தின் (Baloch National Movement) தலைவர் நியாஸ் பலூச் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “பலூச்சிஸ்தான் சுதந்திரம் அடைந்து விட்டதாக சில விஷமிகள் இட்ட பதிவை ஊடகங்களும் நம்பி அதை செய்தியாக்குகின்றன. அது உண்மையில்லை. பலூச் விடுதலை பற்றி எங்களைப் போன்ற அமைப்புகள் வெளியிடும் வரை பொறுத்திருக்கவும். அந்த விஷமிகள் எதிர்களால் (பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ) குழப்பம் உருவாக்க ஏற்படுத்தப் பட்டவர்கள்! – என்று சொல்லியிருக்கிறார்.
அவரது முழுமையான பதிவு:
கடந்த சில நாட்களாக, மே 14 அன்று பலூசிஸ்தான் சுதந்திரம் அடைந்ததாக தவறான கூற்றுகளைப் பரப்பும் அதே அறியப்படாத மற்றும் சரிபார்க்கப்படாத கணக்குகளை நாங்கள் கண்டிருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, சில சர்வதேச ஊடகங்கள் இந்த ட்வீட்கள் உண்மையா என்பதை சரிபார்க்காமல் பகிர்ந்துள்ளன.
தெளிவாகச் சொல்லப் போனால், பலூச் சுதந்திர இயக்கத்தை பலூச் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் வழிநடத்துகின்றன. இதுபோன்ற எந்தவொரு அறிவிப்பும் பலூச் தலைமையிடமிருந்து வர வேண்டும்.
இந்த வகையான வதந்திகளும் போலிச் செய்திகளும் நமது நோக்கத்திற்கு உதவாது, அவை அதற்கு தீங்கு விளைவிக்கும். இது நல்ல நோக்கத்துடன் நண்பர்களால் செய்யப்படுகிறது என்றால், தயவுசெய்து நிறுத்துங்கள். இது எதிரிகளால் செய்யப்படுகிறது என்றால், அது பலூச் சுதந்திரப் போராட்டத்தை சேதப்படுத்தும் முயற்சியை மட்டுமே காட்டுகிறது.
இந்த போலி கணக்குகள் உடனடியாகப் புகாரளிக்கப்பட்டு பின்தொடரப்படாமல் இருக்க வேண்டும். தயவுசெய்து விழிப்புடனும் பொறுப்புடனும் இருங்கள். – என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக, பலூசிஸ்தான் தனது விடுதலையை அறிவித்து விட்டதாக இரு தினங்களுக்கு முன் சமூகத் தளங்களில் செய்திகள் பரவின. அதை எண்ணி இந்தியாவிலும் பலரும் செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர். அவற்றில் இந்தியாவின் உதவியைக் கோரும் வகையில் அவற்றின் செய்திகள் இருந்தன. குறிப்பாக, இந்தியா பாகிஸ்தானை கிழக்குப் பக்கம் இருந்து தாக்கினால், தாங்கள் மேற்குப் பக்கம் இருந்து தாக்குவோம் என்றும், இந்தியா தனது நாட்டில் ஒரு தூதரகத்தைத் திறக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சமூகத் தளங்களில் ஒரு கடிதமும் பரவியது. ஆனால் அவை போலியாக பாகிஸ்தானால் உருவாக்கப் பட்டவை என்று பலூச் தலைவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பலூசிஸ்தான் தனிநாடு விவகாரம் அத்தனை எளிதல்ல. நேரடியாகவே அதில் பல பிரச்சினைகள் உள்ளன என்பதால் இது குறித்து சிந்தித்து சமூகத் தளங்களில் பதிவுகள் செய்யுமாறு சிலர் அறிவுறுத்துகின்றனர்.
எனவே அவசரப்படுவதில் எந்த நன்மையும் இல்லை.
News First Appeared in