தேர்ச்சி பெற்றும் குறைவான மதிப்பெண்... 10ம் வகுப்பு மாணவி சேலையில் தூக்கிட்டு தற்கொலை!
Dinamaalai May 17, 2025 12:48 AM

இன்று தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்த பிரபு -தேவி தம்பதியினரின் இரண்டாவது மகள் சிவானி ஸ்ரீ. இவர் கோ.ஆதனுர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதி இருந்தார்.  இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்   500 க்கு - 201 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார்.   

மிகவும் குறைவான மதிப்பெண் வந்துவிட்டது எண்ணி மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்து உள்ளார்.   மாணவியின் பெற்றோர்கள் கேரளாவில் பணிபுரிந்து வருகின்றனர். வீட்டில் யாரும் இல்லாததால், மாணவி மின்விசிறியில் சேலையை மாட்டி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, மாணவி தூக்கில் சடலமாக  தொங்குவதைக் கண்டு கூச்சலிட்டு கதறி அழுதனார்.  இதுகுறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவி தேர்ச்சி அடைந்து இருந்தார். ஆனால்  குறைவாக மதிப்பெண் எடுத்த காரணத்தால்,  மன உளைச்சலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.