4 மாத கர்ப்பிணி மனைவி தற்கொலை... அதிர்ச்சியில் உயிரை விட்ட கணவன்!
Dinamaalai May 17, 2025 12:48 AM

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விழுதுபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகள் திவ்யா (19). 

திவ்யாவுக்கு இருவீட்டு பெற்றோர் நிச்சயித்து பிரதாப் என்பவரைத் திருமணம் செய்து வைத்தனர். தற்போது திவ்யா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக தனது பெற்றோர் வீட்டில் இருந்த திவ்யா, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியின் தற்கொலை குறித்த தகவல் பிரதாப்புக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், பிரதாப் மனைவி இறந்த சோகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

உடனடியாக பிரதாப் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்று பிரதாப் உயிரிழந்து விட்டார்.

கர்ப்பிணியான திவ்யா தற்கொலை செய்துக் கொண்டதற்கான காரணம் தெரியாத நிலையில், மனைவியின் இறப்பு செய்தியை கேட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருவீட்டு உறவினர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

இது குறித்து வந்தவாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.