பெரும் அதிர்ச்சி…!! பிரபல பாடகி காயத்ரி ஹசாரிகா 44 வயதில் மரணம்… மாநில முதல்வர் இரங்கல்…!!!
SeithiSolai Tamil May 17, 2025 02:48 AM

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகி காயத்ரி ஹசாரிகா. அவருக்கு 44 வயது ஆகும் நிலையில் தற்போது உடல் நலக்குறைவினால் காலமானார். அதாவது இவர் குடல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மரணமடைந்தார்.

அவருடைய மறைவு அந்த மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஷ்வா ஷர்மா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தன் இனிமையான குரலால் ரசிகர்களை மகிழ்வித்த அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.