அன்று தடபுடல் கல்யாணம்; இன்று தடாலடி சோதனைகள்!
Dhinasari Tamil May 17, 2025 02:48 AM

#featured_image %name%

மு.க.ஸ்டாலின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது! டாஸ்மாக்கில் நடந்த முறைகேடு தொடர்பாக சென்னையில் உள்ள பல்வேறு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் மே 16 இன்று சோதனை நடத்தி வரும் சூழ்நிலையில், இவர்களுடன் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடக்கிறது.

தனுஷ் நடிக்கும் ‛இட்லி கடை’, சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‛பராசக்தி’, சிம்பு நடிக்கும் 49வது படம் என ஒரேநேரத்தில் மூன்று முக்கிய நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறார் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன். இதுதவிர இதயம் முரளி என்ற படத்தையும் இயக்கி, தயாரிக்கிறார்.

இதயம் முரளி தவிர்த்து மற்ற படங்கள் ஒவ்வொன்றுமே தலா ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகிறது. ஒரே நேரத்தில் இத்தனை படங்கள் தயாரிக்க பணம் வந்தது எப்படி என்ற கேள்விகளின் அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஆகாஷ் பாஸ்கரன் யார் தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தில் பெண் எடுத்து திருமணம் செய்தவர். மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் வழி பேத்தி தாரணியை திருமணம் செய்தவர்.

கடந்த 2024 நவம்பர் மாதம் நடைபெற்ற திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் தனது மனைவி மகன் மருமகள் என குடும்பத்தோடு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இதன் முழுமையான விசாரணையில் இன்னும் யார் யார் சிக்குவார்களா, இல்லை இது வெறும் கண் துடைப்பாக ஆகுமா என்பதை வரும் காலம் வெளிப்படுத்தும்.

எனினும் மு.க.ஸ்டாலின் நெருங்கிய உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதனிடையே இந்த சோதனைகளை தொடர்பு படுத்தி, பல்வேறு கேள்விகள் சமூகத் தளங்களில் முன் வைக்கப்பட்டன.

மது தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து டாஸ்மாக் கருவூல கணக்குக்கு காட்டாமல் 4 ஆயிரத்துக்கு அதிகமான டாஸ்மாக் கடைகளுக்கு நேரடியாக அனுப்பி ஆயிரக்கணக்கான கோடி லாபம் பார்த்த பணத்தை திரைப்படங்களில் முதலீடு செய்து இருக்கிறார்களா?

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விக்னேஷ் சிவன் உதவியாளராக இருந்த இந்த ஆகாஷ் பாஸ்கருக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எப்படி ஆயிரக்கணக்கான கோடி கிடைத்தது? நூற்றுக்கணக்கான கோடி பணம் முதலீட்டில் திரைப்படங்களை தயாரிக்கிறார் என்னும் கேள்வி தமிழ்நாட்டிலுள்ள டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் மத்தியில் இப்போது எழும்பி இருக்கிறது .

விக்னேஷ் சிவனிடம் உதவியாளராக இருந்தவர் திடீரென்று திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் கோடி முதலீட்டில் ஒரு திரைப்பட நிறுவனத்தை தொடங்கி பெரிய பெரிய நடிகர்களை வைத்து எப்படி படம் தயாரிக்க முடியும்? சிவகார்த்திகேயன் சிம்பு போன்ற முன்னணி நடிகர்களை வைத்து தற்போது திரைப்படம் தயாரித்துக் கொண்டு வருகிறார்.

யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?

சேலத்தை சேர்ந்த பெரும் தொழில் அதிபர் பாஸ்கரனின் மகன் ஆகாஷ். தற்போது திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். ஆகாஷ்க்கு அண்மையில் கெவின்கேர் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகள் தாரணியுடன் திருமணம் நடைபெற்றது. கெவின்கேர் ரங்கநாதனின் மகளுடன் திருமணம் நிச்சயமான பிறகே ஆகாஷ் தயாரிப்பாளராக உருவெடுத்ததாக தகவல் வெளியானது.

கெவின்கேர் ரங்கநாதன் மகளை திருமணம் செய்த பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களுக்கு பூஜை போட்டுள்ளார் ஆகாஷ். இட்லி கடை திரைப்படம் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நிலையில் அந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் ஆகாஷ்.

சுதா கொங்காராவின் பராசக்தி படத்தை பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் ரூ.200 கோடி பட்ஜெட்டில் ஆகாஷ் தயாரிக்கிறார். பிரபல அரசியல் கட்சிகளின் தலைவர்களின் வாரிசுகளுடன் ஆகாஷ் பாஸ்கருக்கு நல்ல நட்பு உள்ளராம்.

ஆகாஷ் பாஸ்கரன் திருமண விழாவில் முக்கிய அரசியல் தலைவர்கள், முன்னணி ஹீரோக்கள், ஹீரோயின்கள் கலந்து கொண்டனர் ஆகாஷ் பாஸ்கர் – தாரிணி திருமண நிகழ்வில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்நிலையில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

இதனிடையே, அதிமுக., ஐ டி விங் வெளியிட்ட பதிவில், டாஸ்மாக் வழக்கில் ED-யின் தொடர் ரெய்டுகள்: வசமாய் சிக்கும் முதல் குடும்பம்? உதயநிதியின் நெருங்கிய நண்பரான ரத்தீஷ் வீட்டிலும், உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் அமைச்சர் அன்பில் மகேஷின் உறவினர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் இன்று நடைபெற்று வரும் ரெய்டு! TASMAC ஊழல்- பத்து ரூபாய் பாலாஜி- ரத்தீஷ்- ஆகாஷ் பாஸ்கரன்- அன்பில் மகேஷ்- உதயநிதி- Connect The Dots! – என்று குறிப்பிட்டிருந்தது.

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.