பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கவில்லை. இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கவில்லை. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த நிலையில் இளைஞர் அணி கூட்டத்திலும் அன்புமணி பங்கேற்காததால் சலசலப்பு நிலவுகிறது.
இன்று தைலபுரத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி அளித்த பேட்டியில், பாமக உட்கட்சி பூசலால் நெருக்கடி நிலை உள்ளது என்பது உண்மைதான். விரைவில் சமூக முடிவு எட்டப்படும். மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் சமூக உடன்பாடு எட்டப்படும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.