தீவிரவாத ஒழிப்பு விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க அனைத்து கட்சி பிரதிநிதிகளை கொண்ட 7 குழுக்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கனிமொழி, சசி தரூர், ரவிசங்கர் பிரசாத், சஞ்சய் குமார் ஷா, சுப்ரியா சுலே உள்ளிட்டோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நிலைப்பாடு குறித்து நட்பு நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு அமைந்துள்ள குழுவிற்கு தலைமை தாங்கி கனிமொழி ஸ்பெயின் செல்ல தேர்வாகியுள்ளார். இது உலக அரங்கில் கனிமொழிக்கான அங்கீகாரத்தை உயர்த்தும். எதிர்க்கட்சி என்ற போதிலும் கனிமொழி இந்தியாவின் நிலைப்பாட்டை அழுத்தமாக விளக்குவார் என்று மத்திய அரசு அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.