தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் சூரி. இவர் சமீப காலமாக நடிகராகவும் களமிறங்கி நடித்து வருகிறார். இவர் விடுதலை பாகம் 1, கருடன், கொட்டுக்காளி, விடுதலை பாகம் 2 போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தை பார்த்த சிறுமி ஒருவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அப்போது அங்கிருந்த நடிகரின் நண்பர், சூரிக்கு போன் செய்து நடந்ததை கூறினார். உடனே அந்த சிறுமிக்கு வீடியோ கால் மூலமாக சூரிய ஆறுதல் தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட சூரி கூறியதாவது, இது எனக்கு ஒரு ஸ்பெஷல் ரிவ்யூ! “மாமன்” படம் பார்த்த பிறகு, இந்த பாப்பா தன்னுடைய தாய்மாமாவை ரொம்பவே மிஸ் பண்ணுறா… இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தருணம் கிடைத்தது என்பது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. தன்னுடைய அன்பான மாமாவை மனதில் வைத்து நினைத்து வருகிற இந்த பாப்பாவின் தாய்மாமாவுக்கு, இந்த படத்தின் வாயிலாக என் அன்பும், மனமார்ந்த வாழ்த்துகளும்!