தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் உள்ளார். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்து கொள்வேன் என்று அவர் அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனக்கு பெண் பார்த்து விட்டதாகவும், பேசி முடித்து விட்டதாகவும், நடிகர் விஷால் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்த அவர் கூறியதாவது, நடிகர் சங்க கட்டிடம் தான் என்னுடைய கனவு. அதனால் தான் கட்டிடம் கட்டிய பிறகு திருமணம் என்று அறிவித்தேன். வெறும் பொய் வார்த்தைக்காக இதை சொல்லவில்லை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன். நான் வெறும் 3 ஆண்டுகளில் முடிந்துவிடும் என்று நினைத்தேன் ஆனால் 9 ஆண்டுகள் தாண்டி விட்டது. தற்போது நடிகர் சங்க கட்டிடம் முடிவடையும் நிலையில் உள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி கட்டிடத்தை திறக்க திட்டமிட்டு இருக்கிறோம்.
அநேகமாக செப்டம்பர் மாதங்களில் எனக்கு திருமணம் நடக்கும். என் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி கூட எனக்கு திருமணம் நடைபெறலாம். எப்படி பார்த்தாலும் இன்னும் 4 மாதங்களில் எனக்கு திருமணம். பெண் பார்த்து விட்டோம் பேசி முடித்து விட்டோம் காதல் திருமணம்தான் அவர் யார்? அவர் பெயர் என்ன? என்பதை நேரம் வரும்போது கூறுகிறேன் என்று கூறினார். இது விஷால் ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.