தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்த பத்திர பதிவை ரத்து செய்ய வேண்டும் சார்பதிவாளரிடம் புரட்சி பரதம் கட்சியினர் மனு அளித்தனர்.
இது தொடர்பாக கோவில்பட்டி சார்பதிவாளரிடம், புரட்சி பரதம் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில் "கோவில்பட்டி வட்டம் ஆலம்பட்டி கிராமத்தில் சர்வே எண் 230/1C8 நிலத்தினை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து அரசு அலுவலர்களை ஏமாற்றி போலியாக பத்திர பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பத்திர பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் கோவில்பட்டி நகர செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட பொறியாளர் துறை மாவட்ட செயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் பாப்பண்டு மாரிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.