இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ எல்லைப் பகுதிகளை கண்காணிக்கும் EOS-09 என்ற செயற்கைக்கோளை PSLV-C61 என்ற ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவியது. செயற்கைக்கோள் பூமியில் உள்ள எந்த இடத்தையும் துல்லியமாக படம் பிடிக்கக்கூடியது.
இதன்மூலம் எல்லைப் பகுதிகளில் உண்டாகும் நகர்வுகளை துல்லியமாக கண்காணிக்க முடியும். ஆனால் இந்த செயற்கைக்கோள் திட்டம் தோல்வியடைந்து விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இன்று காலை 5:59 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் சில நிமிடங்களிலேயே தோல்வி அடைந்துள்ளது.
இந்த ராக்கெட்டின் மூன்றாவது அடுக்கு பிரிந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திட்டம் தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் விண்ணில் பாய்ந்த 8 நிமிடம் 13 வினாடிகளில் 232 வது கிலோமீட்டர் தொலைவில் இந்த திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.