FLASH: 3 மாவட்டங்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பொறுப்பாளராக நியமனம்…. வெளியான தகவல்….!!
SeithiSolai Tamil May 18, 2025 06:48 PM

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் திமுகவின் மூன்று மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக ஏற்கனவே திமுகவில் ஏழு மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் எட்டாவது பொறுப்பாளராக தற்போது எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடலூர் கிழக்கு, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.