மலையாள நடிகர் ரோஷன் உல்லாஸ் கைது..!
Newstm Tamil May 20, 2025 10:48 AM

கொச்சியை சேர்ந்தவர் ரோஷன் உல்லாஸ் 28. ஏராளமான மலையாள டிவி தொடர்களில் நடித்திருக்கிறார். நாட்டுபுறத்து, அச்சுதன், ஓட்டம், நாயிக நாயகன் உள்ளிட்ட மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

திருச்சூரைச் சேர்ந்த இளம் பெண், நடிகர் ரோஷன் உல்லாசுக்கு எதிராக கொச்சி களமசேரி போலீசில் புகார் கொடுத்தார். அதில் ரோஷன் உல்லாஸ் திருமணம் செய்வதாக கூறி கோவை, திருச்சூர், திருக்காக்கரை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று ஓட்டலில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரோஷன் உல்லாசை கைது செய்து விசாரணைக்கு பின் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.